News February 4, 2026
சிக்கன் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விலை குறைந்தது

சண்டே வர வெயிட் பண்ண வேண்டாம், இன்னைக்கே சிக்கன் எடுத்துற வேண்டிதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஹேப்பி நியூஸ். இன்று கறிக்கோழி விலை 1 கிலோ ₹120-லிருந்து ₹5 குறைந்து ₹115 ஆக விற்பனையாகிறது. அதேநேரம், முட்டைக்கோழி விலை ₹72 ஆகவே நீடித்து வருகிறது. முட்டை கொள்முதல் விலையும் ₹5.25 ஆக உள்ளதால், சிக்கன் பிரியர்கள் இன்று ஹேப்பியாக வாங்கி சாப்பிடுங்கள்.
Similar News
News February 10, 2026
அச்சத்துக்கு நடுவில் அரசுப் பள்ளி மாணவர்கள்: EPS

திருவாரூர், நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்கள் விஷப்பாம்பு, <<19093789>>விஷப்பூச்சி <<>>கடித்து உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சி அளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ? சுவர் தன் மீது விழுந்துவிடுமோ? போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். அரசுப்பள்ளியில் மாணவர்கள் வேலை வாங்கப்படுவதையும் EPS கடுமையாக கண்டித்துள்ளார்.
News February 10, 2026
தமிழ் மாணவர்களின் ஆற்றல் வியக்க வைக்கிறது: PM மோடி

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுடன் PM மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்பத்திற்கு மாணவர்கள் அடிமையாகிவிடக்கூடாது என PM மோடி அறிவுறுத்தினார். மேலும் தேர்வு பற்றி, தான் எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்துகளை மாணவர்களுக்கு கூறினார். இதில் தமிழ்நாட்டு மாணவர்களின் ஆற்றல் மற்றும் ஆர்வம் தன்னை வியக்க வைத்ததாக மோடி பாராட்டியுள்ளார்.
News February 10, 2026
BREAKING: ‘ஜன நாயகன்’ பட நீதிமன்ற சிக்கல் தீர்ந்தது

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்று கோரி தொடரப்பட்ட வழக்கை, தயாரிப்பு நிறுவன தரப்பு முறைப்படி வாபஸ் பெற்றுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப படக்குழு தயாராகிவிட்டதாம். எனவே, பிப்.20 (அ) இம்மாத இறுதிக்குள் படம் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


