News August 6, 2024
சிகிச்சை பெற்று வருபவருக்கு ஆறுதல் கூறிய மேயர்

கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆனந்தின் மகன் விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மருத்துவமனை சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
Similar News
News February 14, 2026
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை

பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயகுமாருக்கும், விக்டர் ராஜதாஸ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. இந்நிலையில் கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், காண்டிராக்டருமான விஜயகுமார் நேற்று முன் தினம் கேட்ட போது விக்டர் ராஜதாஸ் காரை வேகமாக ஓட்டி விஜயகுமார் மீது மோதினார். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விக்டர் ராஜதாசுவை கைது செய்தனர்.
News February 14, 2026
கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்..

(13.02.2026) கன்னியாகுமரி மாவட்டம் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .
News February 14, 2026
குமரியில் இரவு காவல் ரோந்து அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, நேற்றைய (13.02.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


