News November 24, 2025
சிகரெட்டை நிறுத்த உதவும் சிறந்த மூலிகை!

புகைப் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஓர் ஆண்டில் சுமார் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக WHO தெரிவித்துள்ளது. இதெல்லாம் தெரிந்தும் உங்களால் சிகரெட் பழக்கத்தை கைவிட முடியவில்லையா? இதற்கு அஸ்வகந்தா எனும் அற்புத மூலிகை உங்களுக்கு உதவும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து குடித்து வர சிகரெட் மீதான் மோகம் குறையும். பலரது உயிரை காக்கும் SHARE THIS.
Similar News
News November 25, 2025
வெள்ளகோவில்: 40 ஆண்டுக்கு பின் கைது! ஷாக்கான மக்கள்

திருப்பூர், வெள்ளகோவில் அடுத்த தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து (75). இவர் முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் அளித்த புகாரில் முதியவர் செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கிளீனிக்கிற்கு சீல் வைக்கப்பட்டது.
News November 25, 2025
டிச.15 வரை கெடு.. OPS-ன் பிளான் இதுவா?

தேர்தல் பற்றி டிச.15-ல் இறுதி முடிவு எடுக்கப்படும், அதற்குள் திருந்துங்கள் என EPS-க்கு OPS கெடு விதித்துள்ளார். ஆனால், உண்மையில் இது EPS-க்கான கெடு அல்ல என கூறப்படுகிறது. அதாவது, ஒத்த கருத்துடையவர்களை இணைத்து NDA கூட்டணியில் மீண்டும் சேர OPS திட்டமிடுகிறாராம். டிடிவியிடம் இன்னும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதனால்தான் டிச.15-ல் முடிவெடுக்கப்படும் என OPS கூறுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 25, 2025
ஆரோக்கியமா இருக்க இந்த ஒரு சூப் குடிங்க போதும்!

குளிர்காலங்களில் சூடாக குடிப்பதற்கு ஏற்ற ஒரு சிறந்த உணவு சூப். அதிலும் பூசணிக்காய் சூப்பில் வைட்டமின் A, C, நார்ச்சத்து என பல சத்துக்கள் உள்ளதால், பல்வேறு நன்மைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *செரிமானத்தை மேம்படுத்தும் *இதய ஆரோக்கியத்திற்கு நல்லது *கண் பார்வையை அதிகரிக்கிறது *தோலுக்கு நல்லது *எடையை குறைக்க உதவுகிறது *உடலின் நீர்ச்சத்துக்கு உதவுகிறது.


