News October 26, 2024

சாலை விபத்தில் 9 மாத குழந்தை பரிதாப பலி

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த குடும்பம் தங்களது சொந்த ஊரான சேலத்திற்கு காரில் சென்றுள்ளனர். வாழப்பாடி அருகே உள்ள தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கார் மோதியது. காரில் இருந்த 9 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மேலும் குழந்தையின் பெற்றோர் தீபக் அழகப்பன், தெய்வானை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News

News January 26, 2026

சென்னை: GH-ல் இவை எல்லாம் இலவசம்!

image

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் சென்னை சுகாதார அதிகாரியிடம்044-24321566 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 26, 2026

சென்னை: மெட்ரோ ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன. 26), ஞாயிறு அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் 12 வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியிலும், பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

News January 26, 2026

சென்னை: DATING செயலியால் மோகம்; விடிய விடிய அடி உதை

image

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் 28 வயதான தனியார் கம்பெனி ஊழியர் ஒருவர் ‘GRINDER’ செயலி மூலம் பலரை தொடர்புகொண்டு தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். செயலில் கனமாப்பேட்டையில் பரிட்சயமான ஒருவரை சந்திக்க சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் இரவு முழுவதும் விடிய விடிய அடித்து உதைத்து, நகை, G-PAY மூலம் ரூ.5,000த்தை அபகரித்துள்ளனர். புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!