News April 3, 2025

சாலை விபத்தில் காவலர் மரணம்

image

ராணிப்பேட்டை சிப்காட்டை அடுத்த பெல் பகுதியில் இருசக்கர வாகனம் லாரி மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலா் ஜெகன்(30) பலத்த காயமடைந்தாா். சென்னைக்கு பணிக்கு சென்ற போது விபத்தில் ஜெகன் காயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஜெகன் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Similar News

News April 4, 2025

ராணிப்பேட்டையில் பல்லவர் கால குடைவரை

image

திருப்பாண்மலையில் பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 3, 2025

இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு !!

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். காவல் என்னை அழைக்கவும் 9884098100

News April 3, 2025

ராணிப்பேட்டை: ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 11 ஆண்கள் & 1 பெண் என மொத்தம் 12 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றிற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட தளபதி ஊர்க்காவல்படை ராணிப்பேட்டை மாவட்ட அலுவகத்தில் நேரடியாக இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 07.04.2025 முதல் 09.04.2025 வரை 3 நாட்கள் மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். *நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. நண்பர்களுக்கும் பகிரவும்*

error: Content is protected !!