News August 10, 2025

சாலை விபத்தில் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

image

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் சேர்ந்த மலையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே மலையராஜா பலியானார். இந்நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News December 10, 2025

பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம்

image

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் (0-18) வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான, மருத்துவ மதிப்பீட்டு முகாமினை நேற்று (டிச.09) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

News December 10, 2025

பெரம்பலூர்: இலவச தையல் பயிற்சி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி எளம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் டிச.15 முதல் 31 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி பெற 19 வயது முதல் 50 வரை இருத்தல் வேண்டும் எனவும், 13-12-2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், மேலும் உதவிக்கு 8489065899 / 9488840328 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!