News January 11, 2025
சாலை விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு

நெமிலி அசநெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சஞ்ஜய் (25), அரக்கோணம் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (28) இருவரும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்தனர். கடந்த 9ஆம் தேதி இரவு காஞ்சிபுரம் – திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே இவர்கள் சென்ற பைக் மீது, காஞ்சிபுரம் நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 26, 2026
காஞ்சிபுரம்: : ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. யூகோ(UCO) வங்கியில் காலியாக உள்ள 173 ஸ்பெசலிஸ்ட் ஆபீசர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E, B.Tech, MBA, CA, M.Sc, MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News January 26, 2026
உத்திரமேரூரில் வெகுண்டெழுந்த மக்கள்!

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் ஒன்றியம், ஆலஞ்சேரி கிராமம் அருகே கல்குவாரி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், அந்தப் பகுதியில் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 மாதங்களுக்கு முன் மனு அளிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து கல்குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்றதால் ஆலஞ்சேரி சுற்றுவட்டார பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருமுக்கூடல் சாலையில் திரண்டு, லாரிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
News January 26, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.25) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


