News December 9, 2025
சாலை கிராமம் பேருந்து நிலைய பணியை பார்வையிட்ட எம்எல்ஏ

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை கிராமத்தில் புதியதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதை இன்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் கட்சியை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News December 10, 2025
காரைக்குடியில் கிலோ கணக்கில் குட்கா பறிமுதல்

காரைக்குடி ரயில்வே பாதுகாப்புப் படையினா் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, நடைமேடை 1-இல் வந்த பனாரஸ்-ராமேசுவரம் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பொதுப் பெட்டியில் சோதனை செய்த போது, மஞ்சள் நிற சாக்குப் பை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. அதில் 10 கிலோ குட்கா இருந்த நிலையில் அதை கைப்பற்றி சிவகங்கை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் வசம் ஒப்படைத்தனா். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
News December 10, 2025
சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.
News December 10, 2025
சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் நிறுத்தம்.!

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், இன்றைய தினம் புதன்கிழமை (10.12.2025) காவிரி கூட்டுக் குடிநீர் மூலம் பயன்பெறும் பகுதிகளில், குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் எனவும், சீரமைப்புக்குப் பின் நாளை முதல் குடிநீர் விநியோகம் சீரடையும் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, தெரிவித்துள்ளார்.


