News April 20, 2025
சாலையோரம் காயங்களுடன் தவித்தவரை மீட்ட சமூக ஆர்வலர்

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நேற்று அடிபட்ட காயங்களுடன் ஒருவர் பல மணி நேரமாக அவதிப்பட்டு வந்தார். விசாரித்ததில் அவர் திருமணஞ்சேரியை சேர்ந்தவர் என தெரியவந்தது. தகவல் அறிந்த சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் மற்றும் சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களது செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Similar News
News August 9, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் உள்ளது போல் குறுஞ்செய்தி தங்களது கைப்பேசிக்கு வந்தால் குறிப்பிட்டுள்ள லிங்கை திறக்க வேண்டாம். அவ்வாறு திறந்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
News August 9, 2025
பொறையாரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்பொழுது அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு அழிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கோப்புகளையும் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
News August 8, 2025
திருச்சி-தாம்பரம் ரயிலை 7 நாட்களும் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்; திருச்சியில் இருந்து தாம்பரம்வரை 5 நாட்கள் இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை 7 நாட்களும் இயக்க வேண்டும்; அந்தியோதயா ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை எம்.பி சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.