News May 9, 2024

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

image

மதுரையில் நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென மிதமான மழை பெய்தது. இந்த மழையினால் மதுரை வைகை ஆற்று வடகரை பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தாழ்வான நிலையில் உள்ள சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.

Similar News

News December 27, 2025

மதுரை: ரேஷன் கார்ட் இருக்கா… முக்கிய அறிவிப்பு… டிச.31 கடைசி

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

மதுரை அருகே 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மருது பாண்டி 19. இவர் நேற்று மாலை வெளியில் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பொழுது அவரது தந்தை தாயாருடன் தகராறு செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மனம் உடைந்த மருதுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 27, 2025

மதுரையில் ஆற்றில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துப்பாண்டி(25). இவரது மனைவி காயத்ரி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி திருவேடகம் அருகில் செல்லும் வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!