News November 15, 2024
சாலையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்போம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இணையதளம் வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய பதிவில் ‘சாலையைக் கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்’ என்ற வாசகம் அடங்கிய பதிவை பகிர்ந்துள்ளனர். செல்போன் பயன்படுத்தப்படும் போது கவனச்சிதறல் காரணமாக விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்.
Similar News
News March 2, 2026
திண்டுக்கல்: புதிய கட்சியை தொடங்கினார்! ஷாக்கில் திமுக

திண்டுக்கல் திமுக தெற்கு ஒன்றிய துணைச் செயலாளரும், தோட்டனூத்து ஒன்றிய கவுன்சிலருமான G.ராதாகிருஷ்ணன், திமுகவிலிருந்து விலகி ‘வெற்றி தமிழர் முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாளை மார்ச்-2.ம் தேதி திண்டுக்கல்லில் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுக விழா நடைபெறுகிறது. ஆளுங்கட்சிப் பொறுப்பிலிருந்த ஒருவர் புதிய கட்சி தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 2, 2026
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் மர்ம மரணம்!

ரெட்டியார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படத்தில் உள்ள இந்நபரின் பெயர் அல்லது முகவரி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01-03-2025) ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தலைமை அலுவலக அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் உள்ளிட்ட உட்கோட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவசர தேவைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பாளர்கள் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.


