News December 8, 2024

சாலூரில் மக்கள் தொடர்பு முகாம் – ஆட்சியர்

image

சாலூர் கிராமத்தில், டிச.11, காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் அரசுத் துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

சிவகங்கை: மன அமைதி பெற இங்க போங்க.!

image

சிவகங்கை நகரசூரக்குடியில் அமைந்துள்ளது தேசிகநாதர் கோயில். இங்குள்ள பைரவர் சூலத்துக்குப் பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு. ஒரு யாகத்தில் சூரியன் பங்கேற்று, சிவனை அழைக்காததால் ஆத்திரமடைந்த சிவன், சூரியனை தண்டித்தார்.பின்னர் சிவன் கருணை கொண்டு சாப விமோசனம் தந்தார்.இதனடிப்படையில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது. குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, மன அமைதி பெற இங்கு வழிபட்டால் நடக்கும் என்பது ஐதீகம்.

News August 9, 2025

ஆங்கிலேயர் கால கல்வெட்டு கண்டடுப்பு

image

ஆங்கிலேய ஆட்சியின் போது இருந்த ராமநாதபுரம் மாவட்டத்தையும், புதுக்கோட்டை அரசையும் பிரிக்கும் எல்லைக்கல் ஒன்று சிவகங்கை நெற்குப்பைக்கும் புதுக்கோட்டை வேந்தன்பட்டிக்கும் நடுவே உள்ள பள்ளத்துப்பட்டி விலக்கு அருகே புதர் மண்டிய இடத்தில் காணப்பட்டது. காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் வேலாயுதராஜா, புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆய்வு செய்தனர்.

News August 9, 2025

சிவகங்கை: கேஸ் BILL பிரச்சனையா இதை பண்ணுங்க..!

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.யாருக்காவது கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!