News October 24, 2024
சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார். அப்பொழுது சார் பதிவாளராக முத்துக்குமார் இருந்தார். இரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அலுவலர்களிடம் சார் பதிவாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News January 30, 2026
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இன்று (30.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிவகிரி, வேட்டுவபாளையம், விளக்கேத்தி, காஸ்பாபேட்டை, வீரப்பம்பாளையம், செட்டிபாளையம், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, 68,80 வேலாம்பாளையம், பவானி நகர், ஊராட்சிக்கோட்டை, மைலம்பாடி, காளிங்கராயன்பாளையம், கூடுதுறை, சத்தி, பேருந்து நிலையம், உக்கரம், அரியப்பம், சிக்கரசம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 30, 2026
ஈரோடு: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

ஈரோடு மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <


