News December 22, 2025

சாரி அம்மா, அப்பா.. என்னால படிக்க முடியல!

image

சத்தீஸ்கர் யூனிவர்சிட்டியில் 2-ம் ஆண்டு Engg., படித்து வந்த மகளுக்கு பெற்றோர் போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால், வார்டனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில், மகள் எழுதி வைத்திருந்த Suicide Note தான் கிடைத்துள்ளது. முதல் செமஸ்டரில் 5 அரியர் வைத்திருந்த மகள், ‘சாரி மம்மி, டாடி, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியல’ என எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Similar News

News December 22, 2025

BREAKING: அதிரடி கைது.. தமிழகத்தில் அடுத்த சர்ச்சை

image

இலங்கைக்கு ₹6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தியதாக இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஆனந்தராஜ், முருகன் ஆகியோரையும் கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கையில் எடுத்த நிலையில், ரவிச்சந்திரன் விவகாரத்தை திமுக விமர்சித்து வருகிறது.

News December 22, 2025

கூட்டணிக்கு அழைப்பு.. முடிவை கூறியது தவெக

image

திமுகவை வீழ்த்த NDA கூட்டணியில் தவெக இணையவேண்டும் என தமிழருவி மணியன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அந்த அழைப்பை தவெகவின் அருண்ராஜ் நிராகரித்துள்ளார். தமிழருவி மணியன் கூறியது அவருடைய கருத்து என கூறிய அவர், தங்களுக்கு அவரது அறிவுரை தேவையில்லை என பதிலளித்துள்ளார். மேலும் யாருக்கு அறிவுரை தேவையோ அவருக்கு கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 22, 2025

விஜய் Kutty Story-ல் சொன்ன அந்த கேரக்டர் யார்? DECODED

image

பைபிளில் வரும் யாக்கோபுவின் 12 மகன்களில் 11-வது மகன் தான் விஜய் குறிப்பிட்ட யோசேப் (ஜோசப்) கேரக்டர். தந்தை இவர்மீது காட்டிய அதீத அன்பை பார்த்து பொறாமைப்பட்ட சகோதரர்கள் இவரை அடிமையாக விற்றனர். இருந்தும் விடாமுயற்சியை கைவிடாத இவர், ஒருநாள் எகிப்தில் ஆளுநராகிறார். இறுதியில், தனக்கு தீங்கிழைத்த சகோதரர்களுக்கும் உதவுகிறார். இப்படியே தானும் உயர்வேன் என்பதை இக்கதையின் மூலம் விஜய் சுட்டிகாட்டுகிறார்.

error: Content is protected !!