News April 2, 2024
சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பம் கிராமத்தில் கள்ள சாராய விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று சின்னசேலம் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அதே கிராமத்தைச் சேர்ந்த அமராவதி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 8 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 28, 2026
கள்ளக்குறிச்சி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
கள்ளக்குறிச்சியில் 27 பேர் மீது அதிரடி வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல்துறையினர் நேற்று (ஜன.27) சங்கராபுரம் நகர பகுதிக்குள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியவர்கள், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள், பதிவெண் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக சென்றவர்கள்,என 27 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


