News July 24, 2024
சாரல் திருவிழா – ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா குற்றாலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை செம்மையாக நடத்திட வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பொது நலன் கருதி நன்கொடை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 24) தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9442227412 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 11, 2025
ஆலங்குளத்தில் தேர்வு தோல்வியால் இளைஞர் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் அருண் பாரத் (32). இவர் ஸ்வீட் கடை வைத்திருந்தார். இவர் சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதி இருந்தார். இதில், அவர் தேர்ச்சி பெறாததால், மனம் உடைந்து காணப்பட்ட அவர், நேற்று (ஜுலை 10) தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News July 11, 2025
தென்காசி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையானது, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வருடத்திற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில் முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இப்பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யவும்.
News July 11, 2025
தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூலை 18 அன்று காலை 10 – 2 மணி வரை நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் 8ம் வகுப்பு முதல் ITI, டிப்ளமோ, டிகிரி வரை கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த <