News January 24, 2026

சாய் பல்லவியை பாராட்டிய ஆமிர் கான்

image

சாய் பல்லவி தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கானின் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ‘ராமாயணா’ படத்திலும் நடித்துள்ளார். ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஆமிர் கான், சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளதாகவும், தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.

Similar News

News January 24, 2026

பாஜகவை பார்த்து விஜய்க்கு அச்சம்: திருமா

image

‘ஜன நாயகன்’ தணிக்கை வழக்கில் பாஜகவின் தலையீடு இருந்தால் அதை விஜய் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். ஆனால், பாஜக மற்றும் மோடி அரசை எதிர்ப்பதற்கு விஜய் தயாராக இல்லை என்றும், அவர் அச்சப்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிவதாகவும் திருமாவளவன் பேசியுள்ளார். மேலும், எதற்காக அச்சப்படுகிறார் என்ற காரணத்தை மக்களிடம் விஜய் கூறவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

News January 24, 2026

நன்மைகள் கொட்டி கிடக்கும் கரிசலாங்கண்ணி!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤கரிசலாங்கண்ணியை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ➤நரம்பு மண்டலத்தில் உள்ள கபால நீரும், பித்தப்பையில் உள்ள கெட்ட பித்தத்தையும் இது வெளியேற்றும் ➤குழந்தைகளுக்கு 2 சொட்டு கரிசலாங்கண்ணிச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும் ➤மஞ்சள் காமாலை போன்ற அனைத்து வகை காமாலை நோய்களுக்கும் கரிசலாங்கண்ணி கீரை சிறந்த மருந்து. SHARE IT.

News January 24, 2026

PM-ஐ கையோடு மதுரைக்கு கூட்டிபோகணும்: உதயநிதி

image

2017-ல் மதுரை​யில் எய்ம்ஸ் வரப்போவ​தாக சொல்​லி, 2019-ல் அதற்​கான செங்​கல்லை வைத்​தனர். 8 ஆண்​டு​கள் ஆகி​யும் கட்டி முடிக்​கப்​பட​வில்​லை என உதயநிதி கூறியுள்ளார். தேர்​தல் வருவதால் PM மோடி 10 முறை​யா​வது TN வருவார் என்ற அவர், அப்படி வருபவரை மதுரைக்கு கூட்டிச்சென்​று எய்ம்ஸுக்கு விடிவு​காலம் வரச்செய்ய வேண்டும் என்றார். மேலும், அது நடந்தால் TN மக்​கள்​ அவருக்கு நன்றி சொல்​வர்​ எனவும் பேசியுள்ளார்.

error: Content is protected !!