News March 4, 2025

சாம்பியன்ஸ் டிராஃபியை இந்தியா வெல்லும்: கங்குலி

image

CT தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ODI) நுட்பமாக விளையாடும் திறமை கொண்டிருப்பதால் கோப்பையை வெல்வதில் சிரமம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், IND 2024இல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது, 2023இல் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2025

கோபம் வந்தாலும் ரமலானுக்கு வாழ்த்து சொல்வோம்: உதயநிதி

image

இந்தியாவிலேயே சிறுபான்மை மக்களின் சொந்த வீடு போல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மக்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் முதலில் துணையாக நிற்பது திமுகதான் எனக் கூறிய அவர், ரமலானுக்கு வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலருக்கு கோபம் வரும். அப்படி வந்தாலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம் எனத் தெரிவித்தார்.

News March 4, 2025

பிரபல பாடகியின் கணவர் காலமானார்

image

அமெரிக்காவின் மிகப் பிரபலமான நாட்டுப்புற பாடகி டாலி பார்ட்டன். தன் கணவர் கார்ல் டீன் காலமானதாக அறிவித்துள்ள டாலி, ‘நானும் கார்லும் ஒன்றாக வாழ்ந்த ஆண்டுகள் அற்புதமானவை. 60 ஆண்டுகள் நாங்கள் பகிர்ந்துகொண்ட அன்பை சொல்ல வார்த்தைகள் போதாது’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கார்லின் மறைவுக்கு உலகம் முழுவதும் திரை, கலையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 4, 2025

வெற்றியை நெருங்கும் இந்தியா

image

சாம்பியன்ஸ் டிராபி செமி பைனலில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வருகிறது. ஆஸி., நிர்ணயித்த 265 ரன்கள் இலக்கை விரட்டும் இந்திய அணி, 40 ஓவர்கள் முடிவில் 200/4 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 80 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த முறையும் சேஸிங் கிங் கோலி நாட்டுக்கு வெற்றியை தேடித் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!