News July 7, 2025
சாமிதோப்பில் கொலை செய்யப்பட்டவர் குறித்து தகவல் தெரிவிக்கவும்

தென்தாமரை குளம் அருகே சாமி தோப்பில் கடந்த 5ம் தேதி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது இதுவரையிலும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீசார் இறந்து போனவர் படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்க கூறி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News August 22, 2025
குமரி: வீட்டிலிருந்தே பட்டா பெறலாம்

கன்னியாகுமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை இனி எளிமையாக பெறலாம். அதற்கு eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!
News August 22, 2025
குமரியில் கொலை; பகீர் வாக்கு மூலம்

மேக்கா மண்டபம் சந்தையில் மணி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் மேசாக் என்பவரைகைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மணி வைத்திருந்த மது பாட்டில்களை காணவில்லை அவர் என்னை சந்தேகப்பட்டு எழுப்பி கேட்டார். இதில் ஏற்பட்ட தகறாலில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
News August 22, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.