News April 6, 2025
சாப்பிட தூண்டும் ஆற்காடு மக்கான் பேடா

ராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆற்காடு பகுதியில் தயார் செய்ப்படும் மக்கான் பேடா மிகவும் பிரபலம். சுவையில் குலாப் ஜாமூன் போல இருக்கும் மக்கான் பேடா உருண்டையில் உலர் பழங்கள் வைக்கப்பட்டு இருக்கும். இதனுள் வைக்கப்படும் உலர்த்தப்பட்ட முந்திர, திராட்சை. பூசணி விதை, வெள்ளரி விதை போன்றவை தான் இதன் தனித்துவத்தை உறுதி செய்கிறது. ஆற்காடு மக்கான் பேடா பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க..
Similar News
News April 8, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News April 8, 2025
மகாவீர் ஜெயந்தி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினம் என்பதால் அந்நாளில் மட்டும் அரசு டாஸ்மாக் மது கடைகளை மூடி வைக்க வேண்டும். மதுக்கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்த மது கூடங்களையும் மூட வேண்டும். மீறினால் மதுக்கூடங்களின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்ரல் 12ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல் நீக்கல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்டவற்றுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம்.