News June 9, 2024
சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாக இருந்த கைரேகை பிரிவு காவல்துறையினர் ஆகியோர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
Similar News
News February 4, 2026
தேனி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.<
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம். SHARE பண்ணுங்க!
News February 4, 2026
தேனியில் அஞ்சல் வணிக முகவராக வேண்டுமா? APPLY

தேனி தபால் துறையில் மத்திய அரசின் அஞ்சல், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிக முகவர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், சுய தொழில் முனைவோர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 99768 21104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தபால் துறையினர் தெரிவித்துள்ளனர்.
News February 4, 2026
தேனியில் 852 பேர் அதிரடி கைது

தேனி பள்ளிவாசல் தெரு பகுதியில் நேற்று (பிப்.3) அங்கன்வாடி ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கோஷங்கள் எழுப்பி ஊர்வலம் செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 852 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.


