News October 13, 2025
சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW
Similar News
News October 13, 2025
வெடிகுண்டு மிரட்டல்: திருச்சியில் தீவிர சோதனை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சோதனை செய்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News October 13, 2025
திருச்சி: தேர்வு கிடையாது – அரசு வேலை!

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <
News October 13, 2025
திருச்சி: நகராட்சி ஊழியர் மீது கத்தியால் தாக்குதல்

துவாக்குடியைச் சேர்ந்த குமார் என்பவர் நகராட்சியில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று துவாக்குடி பகுதியில் தேநீர் அருந்த வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர் மதுபோதையில் குமாருடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் குமாரை அவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சாம்ராஜை நேற்று கைது செய்தனர்.