News April 3, 2025
சாந்தமாக காட்சி தரும் பரிக்கல் நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் பரிக்கலில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில். நரசிம்மர் பொதுவாக ஆக்ரோஷமான தெய்வமாக அறியப்படுவதால் கோயில்களில் பெரும்பாலும் லக்ஷ்மியை மடியில் வைத்துள்ள லட்சுமி நரசிம்மரை வழிபடுவர். ஆனால் இங்கு நரசிம்மர் சாந்தமாக காட்சி தருகிறார். விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான ஆலயமாக உள்ள இங்கு வந்து வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
விபத்தில் படுகாயமடைந்த அதிமுக பிரமுகர் பலி

உப்புவேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). அதிமுக பிரமுகரான இவர், கடந்த 29ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவருடன், பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெருமாள் நேற்று (ஏப்.3) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 4, 2025
விழுப்புரத்தில் கார் கவிழ்ந்து விபத்து பெண் பலி

நெய்வேலி 26 வது பிளாக் பகுதி சேர்ந்தவர் அழகானந்தம், 55. நேற்று இரவு இவர் குடும்பத்துடன் காரில் சென்னை நோக்கி சென்றார். இரவு 8:00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள பேரங்கியூர் நோக்கி சென்றபோது, கார் திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்த மனைவி சுந்தரி, 50; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.