News September 23, 2025

சாத்தூர்: தொட்டு கூட பார்க்க முடியாது – உதயநிதி

image

சாத்தூரில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில், தமிழகத்தை எட்டி கூட பார்க்க முடியவில்லை என ஒன்றிய பாஜக அரசு ஏங்குகிறது. நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை. சண்டை போடும் அளவு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை. 27 ஆண்டுகள் ஆனாலும் திமுக எழுச்சியோடு இருக்கும். திமுக வை தொட்டு கூட பார்க்க முடியாது என கூறினார்.

Similar News

News September 23, 2025

நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்த துணை முதல்வர்

image

சாத்தூரில் இன்று தனியார் திருமண மஹாலில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

News September 23, 2025

அருப்புக்கோட்டையில் செயின் பறித்த நபர் கைது

image

பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி லலிதா(62). இவர் கடந்த சனிக்கிழமை ரயில் நிலையம் அருகே நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர் லலிதா கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.‌ இது குறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம்(33) என்பவரை‌ நேற்று (செப்.22) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 23, 2025

விருதுநகர்: நிதியை மறுப்பது அநீதி – தங்கம் தென்னரசு

image

மாநில அரசுகளின் பங்களிப்பை மறைத்து, இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டுக்கு நியாயமான நிதியை மறுப்பது அநீதி. கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்து, மாநிலங்களுக்கு உரிய நிதியை விடுவித்து, மக்களின் நலனை முன்னிறுத்தி இந்தியாவை உண்மையான வளர்ச்சிப் பாதையில் ஒன்றிய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பதிவில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!