News September 10, 2025
சாத்தூரில் இன்று போக்குவரத்தில் மாற்றம்

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 10, 2025
விருதுநகர் அருகே தோட்டத்தில் சட்டவிரோத செயல்

விருதுநகர் அருகே வாய்ப்பூட்டான்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தீப்பெட்டி, தொழில் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஒரு அறையில் இனாம்ரெட்டியாபட்டியை சேர்ந்த மாணிக்கம்(47), காரிசேரியை சேர்ந்த கருப்புசாமி(45) ஆகியோர் அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. உடனடியாக சூலக்கரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
News September 10, 2025
சிவகாசி: பட்டாசு விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனிடையே ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்தாலோ, ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து விளம்பரம் செய்தாலோ தமிழக சைபர் கிரைம் காவல்துறை தாமாக முன்வந்து கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
சாத்தூர் ரயில்வே கேட் மூடப்படும்

சாத்தூர் ரயில்வே இருப்பு பாதை நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே வழித்தடம் மூடப்படுவதாக ரயில்வே நிறுவாகத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் ரயில்வே பாதையை பயன்படுத்தாமல் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.