News April 2, 2026

சாத்தான்குளம் வழக்கு: இன்று தண்டனை விவரம்

image

சாத்தான்குளம் தந்தை, மகன் லாக்-அப் மரண வழக்கில் கைதான 9 போலீஸும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என CBI & தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இருதரப்பும் அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில், தண்டனை விவரத்தை கோர்ட் இன்றே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 9, 2026

தூக்கத்தில்கூட ஸ்டாலின் புலம்புகிறார்: அன்புமணி

image

வார்த்தைக்கு வார்த்தை பாஜக எனக் கூறி ஸ்டாலின் ஏன் அக்கட்சிக்கு இவ்வளவு பயப்படுகிறார் என்று அன்புமணி கேட்டுள்ளார். ராணிப்பேட்டை பிரசாரத்தில் பேசிய அவர், தூக்கத்தில் கூட பாஜக பாஜக என புலம்பும் ஸ்டாலின், யாராவது தும்மினால் கூட அதற்கும் பாஜகவே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணியில் பாஜக உள்ளதால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை EPS பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.

News April 9, 2026

புதுச்சேரியை ஆளப் போவது யார்? தொடங்கும் வாக்குப்பதிவு!

image

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 1,099 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் இத்தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

News April 9, 2026

தீராத பிரச்னைகளை தீர்க்கும் வெண்பூசணி வழிபாடு

image

புதுக்கோட்டை, திருமயத்தில் 350 ஆண்டுகள் பழமையான கோட்டை பைரவர் கோயில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்தபடி, தனிக்கோயில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே. இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வெண்பூசணி விளக்கேற்றி வழிபடுவது, அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க உதவுமாம். பைரவருக்கு சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!