News August 11, 2024

சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் போராட்டம் அறிவிப்பு

image

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவலராக சுந்தர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக அவருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனைத் தொடர்ந்து வரும் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் மற்றும் 16ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர்கள் தீர்மானித்துள்ளனர்.

Similar News

News March 4, 2026

தூத்துக்குடி: தாயை கொலை செய்த மகன் – அதிர்ச்சி பிண்ணனி

image

கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியத்தை சேர்ந்தவர் வேல்சாமி இளநீர் வியாபாரி. இவர் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார் அவர் தர மறுக்கவே அவரை அரிவாள் மற்றும் செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக கயத்தாறு போலீசார் வேல்சாமியை கைது செய்தனர். வேல்சாமி ஏற்கனவே 2003ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 4, 2026

தூத்துக்குடி: கொலை வழக்கில் சிறுவனுக்கு நூதன தண்டனை

image

விளாத்திகுளம் குருவார்பட்டி சேர்ந்த முருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது தூத்துக்குடி இளம் சிறார் நீதிக் குழும முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் இளம் சிறார் 3 ஆண்டுகள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் 8 மணி நேரம் சேவை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

News March 4, 2026

அமைச்சரின் சொத்து குறிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கினை மார்ச்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!