News October 26, 2024

சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பு  

image

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை அதன் முழு கொள்ளளவான 119 அடியில் அணைக்கு தொடர்ந்து 6000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் அணையில் தற்போது 113.50 அடி நீர் நிரம்பி உள்ளதால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் இதனால் சாத்தனூர் அணை சுற்றியுள்ள 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர்

Similar News

News February 3, 2026

தி.மலை: கை, கால்களை எடுத்து விடுவேன்…Ex MLA டென்ஷன்

image

தி.மலை மாவட்டம் ஆரணியில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ தடுத்து நிறுத்திய நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தை கோயிலுக்கு பெற்றுத்தருமாறு RDO அலுவலகத்தில் கோயில் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர். கோயில் திருவிழாவை முன்னிட்டு கல் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் திமுக எம்.எல்.ஏ சிவானந்தம், மீறி பணியை தொடர்ந்தால் கை, கால்களை எடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News February 3, 2026

தி.மலை: தூக்கில் தொங்கிய சடலம்- PHOTO

image

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் ஏரிக்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் பிப்ரவரி 2, 2026 நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!