News December 21, 2025
சாதி, மத உணர்வுகளை தூண்டுவது ஆபத்தானது: திருமா

மதுரையை சனாதன மையமாக மாற்ற பார்ப்பதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், சனாதன எதிர்ப்பே உண்மையான தமிழ் தேசியம் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனநாயக உணர்வை சொல்லிக் கொடுப்பதற்கு பதிலாக சாதி, மத உணர்வுகளை தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
கிருஷ்ணகிரி: சாலையில் இளைஞர் துடி துடித்து மரணம்!

பெரியகுத்தி அருகே நாகமலை கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்ற இளைஞர் நேற்று (டிச – 30) மாலை 7 மணிக்கு தங்கைக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தங்கையை மருத்துவமனையில் விட்டு விட்டு நாகமலைக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது சின்னகுத்தி அருகே சாலையில் எதிரே வந்த பிக்கப் வாகனத்தில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
News December 31, 2025
ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த Official தகவல் வெளியாகவில்லை.
News December 31, 2025
நடிகை நந்தினி தற்கொலை.. அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

நடிகை <<18717573>>நந்தினி<<>> தற்கொலையில் அடுத்தடுத்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நடிப்பதை நிறுத்திவிட்டு அரசு வேலைக்குச் செல்லுமாறு நந்தினியின் தாய் அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நந்தினியை அரசு வேலைக்கு செல்லும்படி தான் அழுத்தம் கொடுக்கவில்லை என அவரது தாயார் பசவராஜேஸ்வரி விளக்கமளித்துள்ளார். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


