News March 10, 2026
சாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க: துரை வைகோ

சாதி, மதப் பெருமைகளை பேசுவதாலும், இன்னொரு சாதியை திட்டுவதாலும் எந்த பயனும் கிடையாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். சாதி, மதங்களை கடந்தும், அரசியல் வேறுபாடுகளை கடந்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், சாதி, மதம் பார்ப்பது மதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடாதீங்க; நல்ல தலைவர்களைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 1, 2026
திமுக கூட்டணியில் இருந்து விலகும் தனியரசு!

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, புஸ்ஸி ஆனந்தை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். திமுக கூட்டணியில் அவருக்கு சீட்டு வழங்கப்படாததால் கூட்டணியிலிருந்து வெளியேறி தவெகவில் இணைய உள்ளதாகவும் அவருக்கு காங்கேயம் தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக <<19530170>>3 – 5 தொகுதிகளில்<<>> வேட்பாளர்களை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2026
பெண்களுக்கு ₹10 லட்சம் தரும் அரசு திட்டம்!

TN பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க பெண்களுக்கு 25% மானியத்துடன் ₹10 லட்சம் கடன் கிடைக்கும். அத்துடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை பெற, தொழிலுக்கான மொத்த செலவில் 5% விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். 18 – 55 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்துக்கு அப்ளை பண்ண <
News April 1, 2026
போர்.. டிரம்ப் பரபரப்பு அறிவிப்பு

2-3 வாரங்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என்ற அவர், அணு ஆயுதங்களை வேகமாக உருவாக்க முடியாத அளவுக்கு, ஈரானை ’கற்காலத்துக்கு’ அனுப்பிவிட்ட பிறகே அங்கிருந்து கிளம்புவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், போர் குறித்து இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


