News September 24, 2025
சாதித்த அரக்கோணம் இயக்குனர்

அரக்கோணத்தைச் சேர்ந்த இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம், கனடா சர்வதேசத் தமிழ் திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. மேலும், இப்படத்தில் நடித்த நடிகர் சாந்தனு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன் போன்றோரும் நடித்திருந்தனர். ஷேர்!
Similar News
News September 24, 2025
ராணிப்பேட்டை: உங்களின் குடிநீர் சுத்தமானதா? CHECK பண்ணுங்க!

உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். ராணிப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த நீர் குடிக்க உகந்ததா என அங்கு பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்
News September 24, 2025
ராணிப்பேட்டை – ஒரு பார்வை

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.
News September 24, 2025
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

ராணிப்பேட்டையில் இன்று (செப்.24) முகாம் நடைபெறும் இடங்கள்:
* அரக்கோணம் நகராட்சி – ஜாமியா கம்யூனிட்டி ஹால் திருமலை ஆச்சாரி தெரு
* சோளிங்கர் – ராமமூர்த்தி மஹால் வாலாஜா ரோடு
* அரக்கோணம் வட்டாரம் – அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிபுத்தூர்
* வாலாஜா – அம்சா துரை ராஜ் மஹால், கச்சாலன் தெரு
* திமிரி – திம்மாபுரம் அரசினர் உயர்நிலைபள்ளி.
* சூளகிரி – ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சென்னசமுத்திரம் (SHARE IT)