News April 22, 2025
சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

திருப்பூரில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் சென்ற நபர் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
வெள்ளகோவிலில் அடித்தே கொலை

வெள்ளகோவில் அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (77), இவரது மனைவி புஷ்பாத்தாள் (67). கடந்த 10 ஆண்டுகளாக இத்தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நேற்று இரவு இதே போல் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறு ஏற்பட கட்டையால் புஷ்பாத்தாளை, பெரியசாமி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதனையடுத்து பெரியசாமி-யை கைது செய்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 9, 2025
திருப்பூர்: G Pay, PhonePe இருக்கா?

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 9, 2025
திருப்பூர்: ரூ.85,000 வரை சம்பளம்.. வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். (SHARE பண்ணுங்க)


