News January 28, 2026
‘சாகப் போகிறேன்’.. டீச்சரின் விபரீத முடிவு

‘அம்மா, நான் தோற்றுவிட்டேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லாமல் இங்கேயே தகனம் செய்யுங்கள்’. பிஹாரில் அரசு பள்ளி டீச்சர் பிரியா(30) கடைசியாக எழுதிய வரிகள் இவை. நீண்டகால உடல்நல பிரச்னையால் சிகிச்சை பெற்றுவந்த அவர், மன உளைச்சலில் சோக முடிவை எடுத்துள்ளார். தனது 3 மாத குழந்தையை தவிக்கவிட்டு பிரியா தற்கொலை செய்திருப்பது பெரும் துயரம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
Similar News
News January 29, 2026
‘கருத்துப் பெட்டி’ மக்களை நாடும் தவெக

தவெக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், இக்குழுவானது TN முழுவதும் பிப்.1 முதல் பிப்.11 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில், கருத்துப் பெட்டி வைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்படும் என்றும், அதன் அடிப்படையில் TN-ஐ வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News January 29, 2026
தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.
News January 29, 2026
கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை: ஓபிஎஸ்

தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ முடிவெடுக்கவில்லை என OPS கூறியுள்ளார். அதிமுகவை காக்கவும், பிரிந்தவர்களை ஒன்றிணைக்கவும் தான் தற்போது வரை போராடிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அதிமுகவில் மீண்டும் சேர நான் ரெடி என்ற அவர், அண்ணன் எடப்பாடி ரெடியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


