News May 24, 2024
சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த அனுமதி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சவுக்கு சங்கர் இன்று எழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் இன்று மாலை 6 மணி வரை விசாரணை மேற்கொள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கினார். பின் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.
Similar News
News March 6, 2026
சென்னை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

சென்னை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 6, 2026
சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News March 6, 2026
ஊழலை தார் பூசி மறைக்க முடியாது- அன்புமணி

பா.ம.க. தலைவர் அன்புமணி மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் குறித்து அறிக்கை வெளியிட்டார். அவர், “மேம்பாலம் தரமற்றும் பலவீனமாக கட்டப்பட்டுள்ளது. இப்போது அவசரமாக தார்ச்சாலை அமைத்துள்ளனர். உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளால் ஊழலை மூடி மறைக்க முடியாது. நீதி தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்” எனக் கூறினார்.


