News September 21, 2024

சளி தொல்லைக்கு இந்த டீ ஒன்றே போதும்!

image

மழைக்காலத்தில் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவிப்பவரா நீங்கள்? உங்களுக்கான மூலிகை தேநீர் இதோ… துளசி, பட்டை, ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஜாதிக்காய், சித்தரத்தை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து, இடித்து பொடியாக்கி அதை நீரில் போட்டு கொதிக்க வைத்து, இறக்கி தேன் கலந்து குடியுங்கள். சளி தன்னால் நீங்கிவிடும். அத்துடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

Similar News

News August 22, 2025

அவதார புருஷனா விஜய்? RB உதயகுமார் சாடல்

image

அதிமுகவில் சரியான தலைமை இல்லாததால் அதன் தொண்டர்கள் வேதனையுடன் இருப்பதாக விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே விஜய், அதிமுகவை விமர்சித்திருக்கலாம் என RB உதயகுமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக் கொள்வதாக கடுமையாக சாடியுள்ளார். மேலும், அதிமுக EPS தலைமையில் தான் செயல்படுகிறது என்றார்.

News August 22, 2025

RECIPE: கொழுப்பை குறைக்கும் ​முளைகட்டிய பயறு சாலட்!

image

◆செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் கொழுப்பையும் குறைக்க இதுதான் பெஸ்ட்.
➥பாசிப்பயறை முந்தைய நாள் இரவே தண்ணீரில் நன்கு ஊறவைத்து கொள்ளவும்.
➥அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
➥இவற்றில் எலுமிச்சை சாறு, உப்பு, தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து, நன்றாக கிளறவும்.
➥விரும்பினால், வறுத்த வேர்க்கடலை அல்லது முந்திரியை சேர்த்து சாப்பிடலாம். SHARE IT.

News August 22, 2025

GALLERY: நம்ம ஊரு மெட்ராஸூ..!

image

வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்கிற மெட்ராஸ் மாநகருக்கு வயது 386. சென்னை என்றாலே பலருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச்சும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் தான். ஆனால், சென்னையில் இவற்றை போலவே பல Iconic இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். உங்களுக்கு சென்னை என்றால் உடனே ஞாபகம் வருவது என்ன?

error: Content is protected !!