News December 14, 2025
சற்று நேரத்தில் அறிவிக்கிறார் விஜய்

தவெகவில் ஒரு சில தொகுதிகளின் வேட்பாளர்கள் இன்று(டிச.14) வெளியிடப்படவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்களிடம் விஜய் நேர்காணல் நடத்திய நிலையில், 70% பட்டியலை அவர் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது. திருச்செங்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் முன்னிலையில் காணொலி காட்சி வாயிலாக வேட்பாளர்களை விஜய் அறிவிக்க உள்ளாராம்.
Similar News
News December 15, 2025
விஜய்யுடன் கூட்டணி வைக்கிறாரா அன்புமணி?

தவெக உடன் முதல் கட்சியாக பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தவெக தலைவர்களை பாமக பாலு சந்தித்தபோது, கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாம். அப்போது, தவெக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதிகாரத்தில் பங்கு தரப்படும் என பாமகவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாம். ஒருவேளை இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால், வட மாவட்டங்களில் 2026-ல் மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 15, 2025
காலை 1 கிளாஸ் கற்றாழை ஜூஸ்.. இவ்வளவு நல்லதா!

■காலை கற்றாழை ஜூஸில், சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து குடித்தால், எடை இழப்புக்கு உதவுமாம் ■கற்றாழை சாறுடன் நெல்லிக்காயும் சேர்த்து அரைத்து குடித்து வந்தால் முடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும் ■கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழியுமாம் ■மேலும், வாய்ப்புண்ணை விரட்டவும் கற்றாழை ஜூஸ் உதவும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News December 15, 2025
இப்ப இல்லன்னா எப்பவுமே இல்ல: H.ராஜா

பிஹாரில் லாலு பிரசாத் குடும்ப ஆட்சி தூக்கி எறியப்பட்டது போல், TN-ல் கருணாநிதி குடும்பம் எறியப்பட வேண்டும் என H.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறவில்லை என்றால், NDA எப்போதும் வெற்றி பெற முடியாது எனவும் கூறியுள்ளார். திமுக அமைச்சர்களை மக்கள் தெருவில் நிற்க வைத்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


