News November 19, 2025
சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
Similar News
News November 20, 2025
‘மருதநாயகம்’ அப்டேட் கொடுத்த கமல்!

கமல்ஹாசனின் கனவு திரைப்படம் ‘மருதநாயகம்’. அந்த காலகட்டத்திலேயே மிக அதிக பொருள்செலவில் படப்பிடிப்பு தொடங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த ஆசை தனக்கும் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் ‘மருதநாயகம்’ சாத்தியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
சபரிமலை ஸ்பாட் புக்கிங்: இனி 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

சபரிமலையில் நவ.24 வரை ஸ்பாட் புக்கிங் மூலம் தினம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கேரள ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பம்பா, எருமேலி, செங்கன்னூரில் செயல்பட்டு வந்த ஸ்பாட் புக்கிங் மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், <<18327487>>நிலக்கல்<<>>, வண்டிப்பெரியாரில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
கர்ப்பிணிகளுக்கு ₹11,000 கொடுக்கும் அரசு திட்டம்

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ், முதல்முறையாக கர்ப்பிணியாகும் பெண்களுக்கு ₹11,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பட்டியலின/பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். 2 தவணைகளாக வழங்கப்படும் இந்த தொகையை PMMVY.WCD.GOV.IN-ல் விண்ணப்பித்து பெறுங்கள். SHARE.


