News December 7, 2025
சற்றுமுன்: விலை தாறுமாறாக குறைந்தது

கனமழை காரணமாக கடந்த வாரம் முதல் தொடர்ந்து காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ₹10 முதல் ₹20 வரை குறைந்துள்ளது. ₹70-க்கு விற்பனையான தக்காளி ₹40-க்கும், வெங்காயம் ₹20-க்கும், உருளைக்கிழக்கு ₹40-க்கும், குடைமிளகாய் ₹40-க்கும், பாகற்காய் ₹35-க்கும், கேரட் ₹50-க்கும், முள்ளங்கி ₹25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளன.
Similar News
News April 7, 2026
BREAKING கோபி: தவெக செங்கோட்டையன் வேட்புமனு ஏற்பு!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கே.ஏ. செங்கோட்டையனின் வேட்புமனு பரிசீலனை, அதிமுக-வினர் அளித்த ஆட்சேபனையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், பிரமாணப் பத்திரத்தில் இருந்த பிழைகள் குறித்து அவர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்ததையடுத்து, அவரது வேட்புமனு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.
News April 7, 2026
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. இன்டர்நெட் முடக்கம்

மணிப்பூர் மொய்ராங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. இதனால் <<19208220>>உள்ளூர் மக்களிடையே<<>> போராட்டம் வெடித்து, ஒரு லாரி தீக்கிரையாக்கப்பட்டதோடு, CRPF வீரர்களுடனான மோதல்களில் 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து 5 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டு, பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
தவெக வேட்பாளர் KIDNAPPED.. விஜய்க்கு அதிர்ச்சி

எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். அருண்குமாரை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட அக்கட்சியினர், அவர் கடத்தப்பட்டுவிட்டதாக குண்டை தூக்கிப்போட்டுள்ளனர். ஆனால் அருண்குமார் EPS விசுவாசி என்பதால் அவர் விலை போய்விட்டார் என்றும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இது விஜய்க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


