News January 22, 2026
சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

நாமக்கல்லில் கறிக்கோழியின் விலை கடந்த சில நாள்களுக்கு முன் வரலாறு காணாத உச்சமாக ஒரு கிலோ ₹152 ஆக உயர்ந்தது. இதனால், சில்லறை கடைகளில் சிக்கன் கிலோ ₹300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹7 குறைந்து ₹145 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முட்டை கொள்முதல் விலை மாற்றமின்றி ₹5.30 ஆக நீடிக்கிறது. உங்க பகுதியில் சிக்கன் விலை எவ்வளவு?
Similar News
News February 3, 2026
கூட்டணியை எப்போது அறிவிக்கிறார் பிரேமலதா?

தேமுதிகவின் கூட்டணி நிலைபாட்டை பிரேமலதா இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றி எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதன்பிறகே கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்போம் என்ற அவர், வெகு விரைவில் அனைவருக்கும் நல்ல செய்தியை கூறுவோம் என்றார். மேலும், தமிழகம், தேசிய அளவில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவிற்கு தோழமை கட்சிகள்தான் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
தேதி குறித்த விஜய்.. பிப்.6 முதல் தவெக விருப்ப மனு

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்கள் விருப்ப மனுவை அளிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. பிப்.6 – பிப்.14-ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News February 3, 2026
புதுச்சேரியிலும் திமுக – காங்., கூட்டணியில் குழப்பம்

புதுச்சேரியில் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்ற நிலையில் காங்கிரஸ் இடம்பெறவில்லை. இதுகுறித்து EX CM நாராயணசாமியிடம் கேட்டபோது காங்கிரஸுக்கு திமுக அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் திமுக காங்கிரஸ் இடையே குழப்பம் நீடிப்பதாக தெரிகிறது.


