News November 22, 2025
சற்றுமுன்: விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு

ரேஷன் கடைகளுக்கு 2026-க்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாதாந்திர விடுமுறையை தவிர்த்து, பொங்கல், தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்பட மொத்தம் 23 நாள்கள் விடுமுறையாகும். மேலும், ஜன.14-க்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
திருப்பூர் ஜவுளி மையங்களுக்கு பாதிப்பு: காங்கிரஸ்

USA-வங்கதேசத்தின் புதிய வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுக்கு எதிரானது என காங்கிரஸ் சாடியுள்ளது இந்திய ஆடைகளுக்கு 18% வரியும் வங்கதேசத்துக்கு `0’ வரியும் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய காங்., இதனால் வங்கதேச ஆடைகள் குறைந்த செலவில் USA-ல் நுழையும் என்றது. மேலும், இது திருப்பூர், சூரத் ஜவுளி மையங்களையும், பருத்தி விவசாயிகள், ஏற்றுமதியாளர்களையும் கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
News February 11, 2026
FLASH: நடிகை விசித்ரா ஹாஸ்பிடலில் அனுமதி!

நடிகை விசித்ரா மூச்சுத்திணறல் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது கையில் Trips ஏற்றப்பட்டிருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ள அவர், வலிகள் வாழ்க்கையை கடினமாக்கினாலும், நம் மன வலிமையை அது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். சென்னையிலுள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நீங்க விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News February 11, 2026
முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் MP பதிலடி!

கூட்டணி ஆட்சி ஒத்துவராது என <<19108663>>CM ஸ்டாலின்<<>> கூறியதற்கு மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுபற்றி மக்கள் முடிவெடுப்பார்கள் என்ற அவர், கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை 2006-லேயே முடிவெடுக்காதது காங்கிரஸின் தவறு எனவும் பதிவிட்டுள்ளார். 2006-ல் பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உதவியால் திமுக ஆட்சி அமைத்தபோதே ’கூட்டணி ஆட்சி’ பற்றி பேசியிருக்கவேண்டும் என மாணிக்கம் கூறுகிறார்.


