News January 21, 2026

சற்றுமுன்: விஜய் முக்கிய முடிவு

image

தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் விஜய் தலைமையில் ஜன.25-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு பின், அரசியல் நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை, சிபிஐ விசாரணை ஆகியவை குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த விஜய், இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதில், தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News

News January 29, 2026

காங்., அடுக்கிய டிமாண்ட்.. இவ்வளவும் வேண்டுமா?

image

கனிமொழி – ராகுல் சந்திப்பில் காங்., பல டிமாண்ட்களை அடுக்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, 39 தொகுதிகள், து.சபாநாயகர் பதவி, 2 ராஜ்யசபா சீட், 5 வாரிய தலைவர்கள் பதவி, உள்ளாட்சி தேர்தலில் 20 சீட் வேண்டும் என காங்., கோரிக்கை வைத்துள்ளதாம். அத்துடன், ஒருவேளை தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் ‘ஆட்சியில் பங்கு’ தரவேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

News January 29, 2026

பிப்.3-ல் கூட்டணி பற்றி அறிவிப்பு: பிரேமலதா

image

இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்காத தேமுதிக, NDA கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சென்னையில் பிப்.3-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பேன் என்று பிரேமலதா உறுதிபடத் தெரிவித்துள்ளார். அதேநேரம், தமிழகத்தில் உள்ள கட்சிகளுடனும், மத்திய அரசுடனும் தேமுதிக நல்ல நட்புறவுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கலாம்?

News January 29, 2026

AK-வை சந்தித்த MADDY (PHOTOS)

image

கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் அஜித்குமாரை, தமிழ் திரையுலகினர் பலரும் ரேஸிங் களத்தில் சந்தித்து வருகின்றனர். தற்போது துபாயில் உள்ள அஜித்தை, நடிகர் மாதவன் சந்தித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டும் துபாயில் இருந்த போது, அஜித்தை மாதவன் நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘F1’ படத்தை, இவர்களை வைத்து யாராவது ரீமேக் பண்ணுங்களேன் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!