News December 14, 2025
சற்றுமுன்: விஜய் கட்சியின் முதல் வேட்பாளர்

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக இன்று அறிமுகம் செய்கிறது. இதில், முதல் வேட்பாளராக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் அறிவிக்கப்பட இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 20 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
Similar News
News March 2, 2026
ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த UAE

UAE-ன் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு, அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நடவடிக்கையின் மூலம் வளைகுடா நாடுகளில் இருந்து ஈரான் தங்களை ஒதுக்கிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இனி ஈரான் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், இத்தருணத்தில் தங்களது போர் நட்பு நாடுகளுடன் கிடையாது என்பதை ஈரான் புரிந்துகொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.
News March 2, 2026
UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

UAE மீது ஈரான் டிரோன் தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமதுடன் PM மோடி உரையாடியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் UAE உடன் இந்தியா துணை நிற்கும் என்றும், தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர், UAE-ல் உள்ள இந்தியர்களை பத்திரமாக காப்பதற்காக ஷேக் முகமதுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
News March 2, 2026
CINEMA 360°: வசூல் மழையில் ‘தாய்கிழவி’

*ராதிகாவின் ‘தாய்கிழவி’ 3 நாள்களில் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் *ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2′ படத்தின் முதல் பாடல் மார்ச் 4-ம் தேதி ரிலீசாகிறது *’பெத்தி’ படத்தின் டப்பிங் பணிகளை ராம்சரண் தொடங்கியுள்ளார் *ரீ-ரிலீஸில் விஜய்யின் ‘தெறி’ ₹90 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் *பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் விலகியுள்ளார்


