News December 5, 2025

சற்றுமுன்: விஜய் அதிரடி உத்தரவு

image

பூத் முகவர், SIR பணிகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் குறித்து தவெக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க விஜய் முடிவு செய்துள்ளார். அதன்படி, தவெகவின் கிளை நிர்வாகிகளை நேரில் அழைத்து டிச.6, 7 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், பூத் என்றால் என்ன?, SIR என்றால் என்ன? என்பது பற்றியும், உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

Similar News

News March 29, 2026

விஜய் போட்டியிடும் தொகுதி: பிரதான கட்சி வேட்பாளர்கள்

image

விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக RD சேகர், அதிமுக கூட்டணியில் பாமக (வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை), நாதக வேட்பாளராக வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக – இனிகோ இருதயராஜ் (சிட்டிங் MLA), அதிமுக – ராஜசேகரன், நாதக – கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இரு தொகுதிகளிலும் விஜய்யின் வெற்றி வாய்ப்பு எப்படி?

News March 29, 2026

தவெக உடன் கூட்டணி.. தொகுதியை ஒதுக்கி அறிவிப்பு

image

தவெக கூட்டணியில் இணைந்த மனிதநேய ஜனநாயக கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் தவெக சார்பில்(விசில் சின்னத்தில்) மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஹாரூன் ரஷீத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

News March 29, 2026

திருச்சி கிழக்கில் 4-வது MLA ஆவாரா விஜய்?

image

2026 தேர்தலில் பெரம்பூர் & திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். இதில், திருச்சி கிழக்கு தொகுதி 2011-ம் ஆண்டு உதயமானது. இத்தொகுதி இதுவரை 3 பேரவைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 2011, 2016-ல் அதிமுகவின் மனோகரன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 2021-ல் திமுகவின் இனிகோ இருதயராஜ், அதிமுகவின் வெல்லமண்டி நடராஜனை 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

error: Content is protected !!