News November 3, 2025
சற்றுமுன்: லெஜெண்ட் காலமானார்

ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றவர்களில் அதிக வயதானவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான பிரான்ஸின் சார்லஸ் கோஸ்ட்(101) காலமானார். 1948 ஒலிம்பிக்கில் டிராக் சைக்கிளிங் போட்டியில் இவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இந்த லெஜெண்டை கடந்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டி சிறப்பித்தது. அதாவது, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜோதியை ஏந்திச் சென்றது கோஸ்ட் தான். அவரது மறைவு பிரான்ஸையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. RIP
Similar News
News November 4, 2025
ஒரே தொடரில் பல வரலாற்று சாதனைகள்

நடப்பு ODI WC தொடரில் தீப்தி சர்மா பல சாதனைகளை படைத்துள்ளார். ODI WC நாக் அவுட் போட்டிகளில் அரைசதம் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர். ஒரு ODI WC தொடரில் 200+ ரன்கள் மற்றும் 20 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர். ஒரு ODI WC தொடரில் ஒரு போட்டியில், யுவராஜ் சிங்கிற்கு பிறகு அரைசதம் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்தியர் உள்ளிட்ட சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
News November 3, 2025
சற்றுமுன்: கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இன்றைய நாளின் முடிவில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டு ₹88.75 ஆக நிலைபெற்றது. கடந்த அக்.27-ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹88.19 ஆக இருந்த நிலையில், தற்போது ₹88.75 ஆக சரிந்துள்ளது. வலுவான டாலர், அந்நிய செலாவணி வெளியேற்றம் ஆகியவை இதற்கு காரணங்களாகும். ரூபாய் மதிப்பு சரிந்தால், இறக்குமதி செலவு அதிகரித்து, விலைகள் உயரலாம்.
News November 3, 2025
இரட்டை குழந்தைக்கு இரண்டு அப்பாக்கள்

பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்க முடியுமா? பிரேசிலில் நடந்த அப்படி ஒரு அபூர்வ சம்பவம் SM-ல் வைரலாகியுள்ளது. 19 வயது பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் DNA-வை சோதித்ததில் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. மிக மிக அரிதாக, ஒரே மாதவிடாய் சுழற்சிக் காலத்தில், இரண்டு கருமுட்டைகளுடன் இரண்டு வெவ்வேறு விந்தணுக்கள் இணைந்து கருத்தரிப்பதால் இப்படி நடக்க வாய்ப்புள்ளதாம்.


