News October 31, 2025
சற்றுமுன்: லெஜண்ட் காலமானார்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் (கோல்கீப்பர்) மானுவல் ஃபிரடெரிக் (78) காலமானார். உள்ளூர் போட்டிகளில் ஜொலித்த ஃபிரடெரிக், 1972-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். இவர்தான் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் கேரள மாநிலத்தவர். 2019-ம் ஆண்டு, விளையாட்டுக்கான அவரது பங்களிப்புக்காக தியான் சந்த் ( Dhyan Chand) Award வழங்கப்பட்டது.
Similar News
News October 31, 2025
செங்கோட்டையன் அடுத்து என்ன செய்வார்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பின்வரும் 4-ல் ஏதாவதொரு முடிவை செங்கோட்டையன் எடுக்கக் கூடும்: 1)OPS, சசி, டிடிவி ஆகியோருடன் இணைந்து புதிய அணியை உருவாக்கலாம். 2) பாஜக (அ) வேறு கட்சியில் இணையலாம்: ஏற்கெனவே அமித்ஷாவை சந்தித்துள்ள நிலையில், இதற்கு வாய்ப்புள்ளது 3) புதிய கட்சி தொடங்கலாம்: நடைமுறையில் வெற்றிபெறுவது கடினம். 4) EPS உடன் சமாதானம் – இதை செய்தால் முதலுக்கே மோசமாகும். உங்க கணிப்பு?
News October 31, 2025
இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

நீங்க FASTag யூஸ் பண்ணுறீங்களா? இன்றிரவு 12 முதல் ரூல்ஸ் மொத்தமாக மாறுகிறது. வாகனத்தின் KYV( Know Your Vehicle) அப்டேட்டை இன்றைக்குள் முடிக்காவிடில் உங்களது FASTag செயலிழந்துவிடும். அதன்பின், நீங்கள் டோல் கட்டணத்தை பணமாக இருமடங்கு செலுத்த நேரிடும். வங்கியின் வலைதளம் (அ) மொபைல் செயலியில் எளிதாக KYV அப்டேட் செய்யலாம். தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து OTP மூலம் செயல்முறையை முடிக்கலாம். SHARE IT
News October 31, 2025
உலகக்கோப்பையை வென்றதா இந்திய மகளிர் அணி?

Women’s WC-ல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதாக SM-ல் தவறான தகவல் பரவுகிறது. நவ.2-ம் தேதி ஃபைனல் நடக்கவுள்ள நிலையில், விக்கிபீடியாவில் சிலர் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். இலக்கை துரத்திய SA அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்ததாக, பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பாங்க?


