News December 14, 2025
சற்றுமுன்: மூத்த தலைவர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவரும், அகில பாரத வீரசைவ மகாசபையின் தேசிய தலைவருமான ஷமனுர் சங்கரப்பா(92) காலமானார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட பிரச்னையால் பெங்களூருவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத நிலையில், சங்கரப்பா உயிரிழந்தார். எளிமையான பின்னணியில் இருந்து அரசியலுக்குள் நுழைந்த அவர், பல ஆண்டுகளாக MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். RIP
Similar News
News December 15, 2025
குமரியில் மின் கம்பியாள் தேர்வு தள்ளிவைப்பு -ஆட்சியர் தகவல்

குமரி மாவட்டத்தில் 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் தேர்வு நடைபெறம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் அரசு தொழிற் பயிற்சி நிலையம், கோணம், நாகர்கோவிலில் வைத்து நடைபெறம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகவல் தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
இமயமலையில் புதைந்த CIA அணுசக்தி ரகசியம்!

1965-ல் சீனாவை உளவு பார்க்க, இந்தியாவின் உதவியுடன், இமயமலையில் புளூட்டோனியம் நிறைந்த SNAP-19C அணுசக்தி ஜெனரேட்டரை CIA நிறுவ முயன்றது. மோசமான வானிலையால் சாதனத்தை பாதுகாப்பாக வைத்து விட்டு திரும்பிய குழு, பின்னர் சென்று பார்த்தபோது காணாததால், பனிச்சரிவில் அடித்து செல்லப்பட்டதாக நம்பியது. ஆனால், இன்று வரை USA இதுபற்றி வாய்திறக்காத நிலையில், 60 ஆண்டுகளாக அந்த சாதனம் தீராத மர்மமாக புதைந்துள்ளது.
News December 15, 2025
விஜய்யை ஆட்சியில் அமர வைப்பதே லட்சியம்: KAS

ஆண்டுக்கு ₹500 கோடி வரும் திரைத்துறையை விட்டுவிட்டு, விஜய் மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தவெக ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், தனது உடலில் இருக்கும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் சிந்தியாவது விஜய்யை கோட்டையில் அமர வைப்பேன் என்று சூளுரைத்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் மக்கள் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


