News December 15, 2025

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க EPS நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், ஈரோடு, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல், திமுக சாத்தூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் தனுஷ்கோடி, மதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் N.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்தனர்.

Similar News

News April 1, 2026

ஒரே ஓவரில் 11 பந்துகள்.. மோசமான ரெக்கார்டு!

image

IPL-ல் ஒரு ஓவரில் அதிக பந்துவீசிய பவுலர் என்ற மோசமான ரெக்கார்டை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். GT-க்கு எதிரான மேட்ச்சில் 4 வைட், 1 நோ பால் உள்பட அவர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசினார். ஏற்கெனவே, RCB சிராஜ் (vs MI, 2023) CSK துஷார் தேஷ்பாண்டே(vs LSG, 2023), LSG ஷர்துல் தாக்கூர் (vs KKR, 2025), RR சந்தீப் சர்மா (vs DC, 2025), MI ஹர்திக் (vs GT, 2025) ஆகியோரும் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர்.

News April 1, 2026

₹200 வரை உயர்ந்த சுங்கக் கட்டணம்

image

தமிழகத்திலுள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 3% – 5% வரை கட்டணம் உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கார், ஜீப்களுக்கான சுங்கக் கட்டணம் ₹10 வரையிலும், பஸ்கள் & கனரக வாகனங்களுக்கான கட்டணம் ₹40 – ₹200 வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

News April 1, 2026

BREAKING: தவெக வேட்பாளர்கள் மாற்றம்.. விஜய் அறிவிக்கிறார்

image

தவெக வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து புதிதாக வந்த சிலருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் விஜய், இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், 3 முதல் 5 தொகுதிகளில் இந்த மாற்றம் இருக்கும் எனவும் பிரபல தனியார் TV செய்தி வெளியிட்டுள்ளது. பட்டியலை இன்று அல்லது நாளைக்குள் இறுதி செய்து விஜய் அறிவிக்க உள்ளாராம். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!