News November 1, 2025
சற்றுமுன்: மாத முதல் நாளிலேயே ₹1,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்ததால், நகை பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தற்போது மீண்டும் ஏற்றத்தை நோக்கி செல்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹1 உயர்ந்து ₹166-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News November 1, 2025
BREAKING: லெஜெண்ட் விடை பெற்றார்

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் போபண்ணா, கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2019-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2024-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.
News November 1, 2025
புதுவை இந்தியாவுடன் இணைந்தது எப்படி தெரியுமா?

சுதந்திரத்துக்கு பிறகும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மன்னர்களாலும், பிரெஞ்சு, டச்சு நாட்டினராலும் ஆளப்பட்டு வந்தன. 1954-ம் ஆண்டு வரை பிரான்ஸால் நேரடியாக ஆளப்பட்டு வந்த நிலையில், இந்தியாவுடன் இணைய விரும்பி புதுவை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு 1962, நவ 1-ம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியதால், புதுச்சேரி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தது.
News November 1, 2025
திங்கள்கிழமை அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

தமிழகம் முழுவதும் தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும் என TN அரசு அறிவித்துள்ளது. முக்கிய அம்சமாக, முதியோர்களின் வயதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 70 வயதை கடந்தவர்களுக்கு வீடு தேடி பொருள்கள் வழங்கப்பட இருந்தது. தற்போது, 65 வயது நிரம்பினாலே ரேஷன் பொருள்கள் வீட்டிற்கே கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


