News December 14, 2025
சற்றுமுன்: பிரபல வில்லன் நடிகர் காலமானார்

தி மாஸ்க், பல்ப் ஃபிக்சன் உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஹாலிவுட் நடிகர் பீட்டர் கிரீன்(60) மர்மமான முறையில் உயிரிழந்தார். நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பீட்டர் கிரீன் மறைவுக்கு ஹாலிவுட், பாலிவுட் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
கவி பாட தூண்டும் மீனாட்சி சௌத்ரியின் கண்கள்

கருவிழி பார்வையில் காந்தம் உள்ளது போல, ரசிகர்களை கட்டி இழுக்கிறார் மீனாட்சி சௌத்ரி. விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் இளசுகளின் நெச்சைத்தில் முள்ளாய் தைக்கிறது. ஹார்டின்களை பறக்கவிட்டு நெட்டிசன்களால் கொண்டாடப்படும் போட்டோஸ் மேலே உள்ளன. நீங்களும் பார்த்து மகிழுங்கள், நண்பர்களும் பகிருங்கள்..
News December 15, 2025
ஜாக் மாவின் பொன்மொழிகள்

✪ கனவுகளின் அழகை நம்புகிறவர்களுக்கு தான் எதிர்காலம் சொந்தம் ✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு ✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியாசமானவராக இருக்க வேண்டும் ✪ யோசனைகள் எதுவென்பது முக்கியமல்ல; அவற்றை செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம் ✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.
News December 15, 2025
தமிழகத்தில் பொங்கலை கொண்டாட உள்ளாரா PM மோடி

ஜனவரி 13 முதல் 15-ம் தேதி வரை 3 நாள்களுக்கு தமிழகத்தில் PM மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள அவர், ஜன.14-ம் தேதி விவசாயிகளுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ உள்ளாராம். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து PM மோடி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


