News December 13, 2025
சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்

மலையாள இளம் நடிகர் அகில் விஸ்வநாத் (30), மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். மயங்கிய நிலையில் கிடந்தவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 2019-ம் ஆண்டு ‘Chola’ படத்திற்காக கேரள அரசின் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 8, 2026
நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி

கடலூர் மஞ்சைநகர் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அதில், காலை 10 மணிக்கு தொடங்குய பிரச்சாரத்தை 1 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும். பிரச்சார வாகனத்தை பின்தொடரவோ அதன்மீது ஏறுவது கூடாது. குழந்தைகள் கர்ப்பிணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். குடிநீர், மருத்துவம் ஆம்புலன்ஸ் போன்றவை இருக்க வேண்டுமென தெரிவித்தனர்.
News April 8, 2026
தென்மாநில உரிமைக்கு உலை வைக்கும் பாஜக: ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய பாஜக அரசு ரகசியம் காப்பது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்கிடையே அவசரமாக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவதற்கு என்ன அவசியம் என்றும் கேட்டுள்ளார். தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் திட்டத்தை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என கூறியுள்ளார்.
News April 8, 2026
தமிழ்நாட்டில் தங்கம் பூமிக்கு அடியில் கிடைத்தது எப்போது?

தமிழ்நாட்டில் பூமிக்கு அடியிலிருந்து எப்போது முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876-ல் தான் ஆங்கிலேயர் காலத்தில் முதல் முறையாக தங்கம் கண்டெடுக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் பழங்கால ஈமச்சடங்கு சார்ந்த தங்கம், பெரும் ஈமக்காடு (Megalithic Burial Site) ஆகியவை கிடைத்தது. அது பற்றிய ஆய்வுகள் இப்போதும் தொடர்கின்றன.


